புதிய பைக் ரூபத்தில் வந்த எமன்; ஒரே பகுதியை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

Published : Oct 04, 2023, 07:01 PM IST
புதிய பைக் ரூபத்தில் வந்த எமன்; ஒரே பகுதியை சேர்ந்த 2 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி

சுருக்கம்

தேனி மாவட்டத்தில் புதிதாக வாங்கப்பட்ட இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கழிவு நீர் கால்வாயில் விழுந்ததில் 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதி ஜெயந்தி காலனியைச் சேர்ந்த 19 வயது  கல்லூரி மாணவர்கள் அஸ்வின் மற்றும் யுவராஜா. இவர்கள் இருவரும் புதிய பல்சர் வாகனத்தில் வடுகபட்டியை நோக்கி அதிவேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது வடுகபட்டி பஞ்சமுக விநாயகர் கோவில் வளைவில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்பு கற்களை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த கழிவு நீர் செல்லும் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் விழுந்து விபத்து ஏற்பட்டது. 

உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு வழிநெடுக நின்று மலர் தூவி மரியாதை செலுத்திய அரசு மருத்துவர்கள்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த விபத்தில் கல்லூரி மாணவர்கள் இருவரும் கழிவுநீர் கால்வாயில் மூழ்கினர். இதனைத் தொடர்ந்து வடுகபட்டி பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் விபத்துக்குள்ளாகி கழிவுநீர் செல்லும் கால்வாயில் மூழ்கிய இளைஞர்களை மீட்டபோது இருவரும் தலையில் பலத்த காயம் அடைந்து நீரில் மூழ்கி பலியான நிலையில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் பலியான இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவர்கள் விபத்தில்  பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்
Tamil News Live today 08 December 2025: எடப்பாடிக்கு வேட்டு வைத்த செங்ஸ்..! விஜய் தான் முதலமைச்சர் என சபதம்