மான் இறைச்சி கடத்திய 2 பேர் கைது; 5 பேர் தப்பியோட்டம்…

Asianet News Tamil  
Published : Jan 17, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மான் இறைச்சி கடத்திய 2 பேர் கைது; 5 பேர் தப்பியோட்டம்…

சுருக்கம்

பவானிசாகர் வனத்தில் வேட்டையில் ஈடுபட்டு மானைக் கொன்று இறைச்சியைக் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களில் 30 கிலோ இறைச்சியுடன் வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பவானிசாகர் வனப் பகுதியான காடேபாளையத்தில் வனத் துறையினர் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சோதனையிட்டபோது சாக்குப் பையை சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் மான் இறைச்சி கடத்திச் செல்வது தெரியவந்தது.

அவர்களிடமிருந்த மான் தலை, கால், இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிட மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்கள் ஒத்தபணங்காட்டைச் சேர்ந்த சாமிநாதன், மாரன் என தெரியவந்தது.

மேலும், இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர்.

பிடிபட்டவர்கள் அளித்த தகவலின்படி, தப்பியோடியவர்களிடம் 30 கிலோ மான் இறைச்சி இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், ஒத்தபணங்காடு வனத்தில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 மான்களை கொன்று, அதன் இறைச்சியைக் கடத்தியதும், இதில், 7 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய ஐந்து பேரை வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

விஜய் வெற்றிபெற திருச்சியில் புஸ்ஸி ஆனந்த் அதிரடி வழிபாடு | N. Anand | Trichy
தேர்தல் நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை எச்சரிக்கை? எந்தெந்த மாவட்டங்களில்? சென்னையின் நிலை என்ன?