கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற பக்தர்களை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார்.
இந்தியா - இலங்கை பக்தர்கள் ஒன்றிணைந்து பாரம்பரியமாக வழிபாடு நடத்தி வரும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்நிலையில், 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு பக்தர்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில், கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி அளுக்கப்பட்டுள்ள நிலையில் ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து 60 விசைப்படகுகள், 12 நாட்டுப்படகுகள் என மொத்தம் 72 படகுகளில் 2,400 க்கும் மேற்பட்டவர்கள் கச்சத்தீவு திருப்பயணம் மேற்கொள்ள பதிவு செய்தனர். பதிவு செய்த பக்தர்கள் ராமேசுவரம் துறைமுகத்திற்கு வருகை தந்தனர்.
கள்ளக்காதல் விவகாரம்; மனைவிக்கு விஷ ஊசி செலுத்திய கணவன், பெண் கைது
உளவுத்துறை, காவல் துறை, சுங்கத்துறை அதிகாரிகள் பக்தர்கள் கொண்டு செல்லும் பொருட்களை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு படகிலும் 25 பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து பயணத்தை துவக்கி வைத்தார். மேலும் படகில் பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் அனைவரும் பாதுகாப்புடன் பயணம் மேற்கொண்டு திரும்பிட வேண்டும் என வலியுருத்தி வாழ்த்து தெரிவித்தார்.
சம்பளமோ 5% கூட உயரல, சமையல் எரிவாயு விலையோ 58% உயர்வு - ராமதாஸ் கண்டனம்
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவிற்கு படகில் செல்லும் இந்திய பக்தர்கள் அனைவருக்கும் சர்வதேக கடல் எல்லை வரையில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர் கப்பல் மற்றும் படகில் சென்று பாதுகாப்பு வழங்கினர்.