சகோதரன் போல் பழகி கற்பழித்த கொடூரன்...! 14 வயதில் தாயான சிறுமி..! வீட்டை விட்டே விரட்டப்பட்ட அவலம்..!

 
Published : Jun 03, 2018, 07:42 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
சகோதரன் போல் பழகி கற்பழித்த கொடூரன்...! 14 வயதில் தாயான சிறுமி..! வீட்டை விட்டே விரட்டப்பட்ட அவலம்..!

சுருக்கம்

14 years girl sexually abuse and through out the home

பிரபல நாளிதழ் ஒன்று, 14 வயதில் அம்மாவான சிறுமியை பற்றிய கண்ணீர் கதையை வெளியிட்டிருக்கிறது. இது பலரது நெஞ்சையும் உருக்கும் விதத்தில் உள்ளது.

இது குறித்து அந்த சிறுமி கூறியுள்ளது... "நான் பள்ளியில் படித்திக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டின் அருகே குடியிருந்த ஒரு பையனோடு பேசுவேன். அவனும் என்னிடம் நன்றாக பேசுவான். நாங்கள் எதேர்ச்சியாக பேசுவதை கூட என்னுடைய பெற்றோர் கண்டித்தனர்.

அவன் சரி இல்லாதவன் அவனிடம் பேசாதே என்று. ஆனால் அந்த பையனை நான் சகோதரனாக பார்த்ததால் அவன் மீது துளியும் கெட்ட விதமான அபிப்பிராயம் வரவில்லை. இதனால் தொடர்ந்து அவனிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.

ஒரு நாள் எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் திருமணத்திற்காக ஊருக்கு சென்று விட்டனர். நான் மட்டும் வீட்டில் தனியாக இருந்தேன். கதவை திறக்காதே யார் வந்தாலும் வீட்டின் உள்ளே சேர்க்காதே என எச்சரித்துவிட்டுத் தான் சென்றார்கள். 

ஆனால், நான் அவர்கள் சொன்னதை கேட்காமல் கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் இருந்தேன். அப்போது திடீர் என என்னுடைய வீட்டுக்கு அந்த பையன் வந்தான். என்னுடன் பேசிக்கொண்டே காபி குடிக்கலாமா எனக்கேட்டான். நான் காபி போட சென்ற போது திடீர் என கதவைப் பூட்டினான். அதிர்ச்சியடைந்த நான் கதவை திறக்க சென்றபோது. என்னை கட்டி அணைத்து உன் மேல் உயிரையே வைத்துள்ளேன் என கூறினான்.

அதற்கு நீ என்னுடைய சகோதரன் மாதிரி என புரியவைத்தும் பயனில்லை. என்னை கற்பழித்தான். நான் தடுக்க முயன்றும், அவனுடைய பலத்துடன் போட்டி போட முடியாமல் தோற்று அவனிடம் என்னையே இழந்தேன். இந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்துக்கொண்டு, இதனை யாரிடமும் கூற கூடாது என்றும் நான் சொல்வதை செய்தே ஆக வேண்டும் என்று கூறினான்.

சில நாட்களில் நான் கர்பமானேன். 14 வயது ஏதும் சொல்லி புரிய வைக்க தெரியவில்லை. என்னுடைய பெற்றோருக்கு இது குறித்து தெரிய வந்ததும் என்னை வீட்டை விட்டே வெளியேற்றினர். நான் அவங்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டேன் என்றும் இனி தான் அவர்களுடைய மகள் இல்லை என்றும் கூறினார் என்னுடைய சகோதரியை கூட இன்று வரை அவர்கள் பார்க்க விடவில்லை.

தற்போது எனக்கு பதினேழு வயது ஆகிறது, ஒரு குழந்தையோடு என்ஜிஓ நிறுவனத்தில் வேலை பார்பதாக கண்ணீரோடு கூறியுள்ளார்".
 

PREV
click me!

Recommended Stories

1 கோடி வாக்காளர்கள் நீக்கம்..! ஸ்டாலின் மவுனம் காப்பது ஏன்..? புயலைக் கிளப்பும் பின்னணி..!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.! கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. சென்னையின் நிலை என்ன?