குளிர்பானத்தில் மயக்க மருந்து! ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ! விசாரணையில் வெளியான அதிர்ச்சி...

 
Published : Jul 18, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:44 AM IST
குளிர்பானத்தில் மயக்க மருந்து! ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ!  விசாரணையில் வெளியான அதிர்ச்சி...

சுருக்கம்

13-year-old physically challenged girl gang-raped

வயது வாய் பேச முடியாத சிறுமியை கடந்த 7 மாதங்களாக, மயக்க ஊசி போட்டும், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பல்வேறு பல்வேறு அதிர்ச்சித்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குள்ள ஒரு வீட்டில் வாய் பேச முடியாத காது கேளாத சிறுமி ஒருவர் பெற்றோருடன் வசித்து வந்த அந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அவரது தாய் அவரை பரிசோதித்தார். அப்போது அவர் பல மாதங்களாக பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதை அறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அந்த சிறுமியிடம் பேசி யார் யார் இதில் ஈடுபட்டது என விசாரித்த பெற்றோர் பெரும் அதிர்ச்சியானார்கள். தனது வாய் பேசமுடியாத குழந்தையை இப்படி சீரழிதுள்ளார்களே என கதறிய அவர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.  அதில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கவாலாளி, பிளம்பர், தண்ணீர்கேன் போடுபவர் என 15 பேரை அடையாளம் காட்டினார் அந்த சிறுமி.

மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து 7 மாதங்களாக நாள்தோறும் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளனர். குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்தும் மயக்க ஊசி போட்டும், போதை மருந்து கொடுத்தும் அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியுள்ளன அந்த காம வெறிபிடித்த மிருகங்கள். அதுமட்டுமல்லாமல் அந்த சிறுமியின் ஆடைகளை களைந்து செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காட்டி கத்தி முனையில் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆள் நடமாட்டமில்லாத மொட்டை மாடி, டாய்லெட், ஜிம் என பல இடங்களுக்கு அந்த சிறுமியை தூக்கி சென்று காம வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். 

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், காவலாளி, பிளம்பர் என மொத்தமாக 18 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துள்ள போலீசார், கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல வழக்குகளையும் பதிந்துள்னர்.

PREV
click me!

Recommended Stories

அந்த முட்டாளுக்கு தான் சொல்லுறேன் திமுக ஆட்சிக்கு வந்து செஞ்ச முதல் ஊழல் இதுதான் - ஹெச்.ராஜா பேட்டி
அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!