
தமிழகத்தில் 10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் மே மாதம் இறுதித்தேர்வு நடைபெறவுள்ளது. இதனால் தற்போது பிளஸ்1, பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை 12 வகுப்பு திருப்புதல் கணித தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், கணிதத்தேர்விற்கான திருப்புதல் தேர்வு வினாத்தாள் கசிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற முதல் திருப்புதல் தேர்விலும் 10, 12 ஆம் வகுப்பு வினாத்தாள்கள் தேர்விற்கு முன்னதாக கசிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியநிலையில் மீண்டும் 2ம் கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிந்துள்ளது. நாளை நடைபெற உள்ள 12 ஆம் வகுப்பு கணித தேர்விற்கான தற்போத சமூக வலைதளங்களில் கணிதத்தேர்விற்கான வினாத்தாள் கசிந்துள்ளது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதற்கட்ட தேர்வு வினாத்தாள் ஏற்கனவே கசியாகியிருந்த நிலையில் தற்போது மீண்டும் வினாத்தாள் கசியாகியிருப்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ள நிலையில் தற்போது வினாத்தாள் வெளியாகியிருப்பது பள்ளிக்கல்வித்துறை வட்டாரத்ததில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதிய வினாத்தாளை வைத்து 12 ஆம் வகுப்பு கணித தேர்வு நாளை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் திருப்புதல் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.