10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதன் படி, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 20 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு பிளஸ் 2 தேர்வும் 12 மணியளவில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை வெளியாகவிருந்த 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடந்து முடிந்தது. 10 ஆம் வகுப்புக்கு கடந்த மே மாதம் 6 ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி வரை நடந்தது. இந்த தேர்வினை தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்ச மாணவ - மாணவியர் எழுதினர்.
undefined
இதனை தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தம் செய்யும் பணியானது கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை சுமார் 83 மையங்களில் நடைபெற்றது. மேலும் விடைத்தாள்களை திருத்தம் செய்து, மதிப்பெண்களை தொகுத்து அவற்றை தேர்வுத்துறை அலுவலர்கள் சரிபார்த்த பின், தேர்வுத்துறையின் இணையதளங்களில் பதிவேற்றும் பணி நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இதனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜூன் 17 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது. அதன்படி, நாளை காலை 10 மணிக்கு http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளதாக தெர்விக்கப்படிருந்தது. இந்நிலையில் தற்போது திடீரென்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:நாளை 10 ஆம் வகுப்பு ரிசல்ட்.. மாணவர்கள் எவ்வாறு முடிவுகளை தெரிந்துக்கொள்ளுவது..? முழு விபரம்..