108 ஆம்புலன்ஸ் எண் சேவை பாதிப்பு... தற்காலிக எண் அறிவிப்பு!

By vinoth kumarFirst Published Oct 8, 2018, 5:14 PM IST
Highlights

பி.எஸ்.என்.எல்.-ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன் சேவை சீர்செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

பி.எஸ்.என்.எல்.-ல் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன் சேவை சீர்செய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. விபத்தின்போதோ, மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது.

 

108 எண்ணுக்கு போன் செய்தால், நேரடியாக வந்து முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்வார்கள். இந்த சேவை, ஏழை-எளிய மக்களுக்கு பெரும் உதவியாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பலர் 108 எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை. இது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 108 எண் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சரிசெய்யப்படும் வரை 044-40170100 என்ற எண்ணை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு விரைவில் சரிசெய்யப்பட்டு வழக்கம்போல் 108 சேவை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில், சுமார் ஒரு மணி பாதிக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன் சேவை தற்போது சீர்செய்யப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

click me!