உருவானது 2 புயல் சின்னம்...! தள்ளிப்போனது வடகிழக்கு பருவமழை!

By vinoth kumarFirst Published Oct 8, 2018, 1:56 PM IST
Highlights

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை லேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரபிக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகி உள்ளது. இதற்கு லுாபன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் தெற்கு ஓமன் நாட்டு கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது. 

இது, மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 2 நாட்களில் புயலாக வலுப்பெற்று ஒடிசா கரையை நோக்கி நகரும். இந்த இரண்டு புயல் சின்னங்களால் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, வட கிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 

கடந்த 24 மணி நேரத்தில் திருபுவனத்தில் 15 செ.மீ., மானாமதுரையில் 13 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு. சென்னையைப் பொறுத்தவரை இலேசான மற்றும் மிதமான மழை பெய்யலாம். 8 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

click me!