
தருமபுரி அருகே மயானப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு டன் ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தருமபுரி அடுத்த மதிகோன்பாளையம் மயானப் பகுதியில், ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் ஒன்று கிடைத்தது.
ஆட்சியர் கே.விவேகானந்தன் உத்தரவின் பேரில், பறக்கும் படை வட்டாட்சியர் செந்தில் தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மயானப் பகுதியில் முள்புதரில் தலா 50 கிலோ எடை கொண்ட மூட்டைகளில் சுமார் ஒரு டன் ரேசன் அரிசி இருந்ததைக் கண்டுபிடித்தனர்.
இந்த அரிசி மூட்டைகளை மீட்ட அதிகாரிகள், அவற்றை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
மேலும், அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்தவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.