காவேரியை விஞ்சியது பாலாறு… தொடர்ந்து 1 லட்ச கனஅடி நீர் ஓட்டம்!!

By Narendran SFirst Published Nov 21, 2021, 2:48 PM IST
Highlights

வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாலாறு கடல்போல் காட்சியளிக்கிறது. 

வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலாறு கடல்போல் காட்சியளிக்கிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக கர்நாடக, ஆந்திரா வனப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.  ஆந்திர மாநிலத்தில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து பாலாற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கிளை ஆறுகளில் பாயும் வெள்ளமும் பாலாற்றில் கலக்கத் தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு லட்சம் கன அடி நீர் பாலாற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு பெய்த பெரு வெள்ளத்தின் போது கூட 45 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்பட்டது. சுமார் ஒன்றரை மாதங்களுக்கு மேலாக பாலாற்றில் வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பாக கடந்த 10 நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி ஆற்றில் நீர் கலந்து ஒருவித காரணத்தினாலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றில் வடகிழக்கு பருவ மழை  காரணமாக அதிகபட்சமாக 60 ஆயிரம் கன அடி நீர் அளவிற்கு சென்று கொண்டிருந்தது. நேற்று காலையில் இருந்து காஞ்சிபுரம் பாலாற்றில் சுமார் 30 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் திறந்து விடப்பட்ட ஒரு லட்சம் கன அடி நீரும் தற்போது பாலாற்றில் சென்று இருப்பதாலும் அந்த நீர் தற்போது வேலூர் மாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளே புகுந்து வேகமாக ஆறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. வரலாறு காணாத இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக காஞ்சிபுரம் பாலாற்றின் தரைப்பாலம் அதேபோல வாலாஜாபாத் பாலாற்றின் தரைப்பாலம் முழுமையாக நிரம்பி உள்ளது. மேலும் இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக பாலாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

"

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நடுவே  சுமார் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள பாலாற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருக்கழுகுன்றம் பகுதியில் இருந்து மதுராந்தகம் செல்வதற்கு முடியாத நிலை உள்ளது. ராணிப்பேட்டை மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கனமழை காரணமாக பாலாற்றில் அதிக அளவில் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக வல்லிபுரம் ஈசூர் ஆகிய பகுதிகளில் உள்ள இந்த பாலத்தின் மேல் 2 அடி தண்ணீர் ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் செங்கல்பட்டு வழியாக மதுராந்தகம் செல்லவும் மதுராந்தகத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக திருக்கழுகுன்றம் செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்களுக்கு தண்டோரா மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

click me!