
எம்.டி, எம்.எஸ் படிப்பில் 50% இடங்களை அரசுக்கு தருவதில்லை என நாமக்கலை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விதி மீறிய தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்காத எம்.சி.ஐ க்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்துள்ளது.
மேலும் தமிழக அரசு மெத்தன போக்கோடு செயல்பட்டதால் தமிழக அரசுக்கும் ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது.
தகுதி உள்ளவர்கள் தமிழக அரசின் மெத்தனத்தால் எம்.டி, எம்.எஸ் சேர முடியவில்லை எனவும், கல்லூரிகள், தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியோர் விதியை பின்பற்றவில்லை எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் மேல்படிப்பில் 50% இடங்களை அரசுக்கு வழங்க வேண்டும் எனவும், அரசு கவுன்சில் மூலம் மருத்துவ முதுநிலை படிப்பில் மாணவர்களை சேர்க்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.