’சண்டக்கோழி2’ பத்தி வெளிய சொல்லக்கூடாத அந்த ரெண்டு விஷயங்கள்... குழப்பும் விஷால்!

Published : Oct 18, 2018, 09:54 AM IST
’சண்டக்கோழி2’ பத்தி வெளிய சொல்லக்கூடாத அந்த ரெண்டு விஷயங்கள்... குழப்பும் விஷால்!

சுருக்கம்

தியேட்டர்காரர்களுடனான பஞ்சாயத்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்துவிட்டு தனது ‘சண்டக்கோழி2’ வை ஒருவழியாக ரிலீஸ் செய்துவிட்டார் விஷால்.

தியேட்டர்காரர்களுடனான பஞ்சாயத்தை ஒரு வாரத்துக்கு தள்ளிவைத்துவிட்டு தனது ‘சண்டக்கோழி2’ வை ஒருவழியாக ரிலீஸ் செய்துவிட்டார் விஷால். தியேட்டர் பிரச்சினை எப்படி தீர்க்கப்பட்டது என்பதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியிடப்படாத நிலையில், தற்போதைக்கு விஷால் தன் பட ரிலீஸுக்காக சுயநலமாக முடிவெடுத்திருக்கிறார் என்றே தெரிகிறது. இவரது சமாளிப்பு சீக்கிரமே சந்திக்கு வந்துவிடும். 

 இது ஒருபுறமிருக்க, விமர்சகர்கள் படம் ரிலீஸாகி மூன்று தினங்களுக்குப் பின்னர் விமர்சனம் எழுதினால்தான் தயாரிப்பாளர்கள் ஓரளவுக்காவது தப்பிக்கமுடியும் என்று புத்திசாலித்தனமாக கோரிக்கை வைத்திருந்த விஷால், தற்போது ‘சண்டைக்கோழி2’க்காக இன்னொரு விசித்திரமான வேண்டுகோளையும் வைத்திருக்கிறார். 

அதாவது படத்தில் முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கின்றனவாம். அந்த இரண்டையும் குறித்து விமர்சனம் எழுதும்போது குறிப்பிடவேண்டாமாம். அது எந்த ரெண்டு என்று கேள்வி எழுப்பினால், நீங்க படம் பார்க்கும்போது புரிஞ்சுக்குவீங்க என்கிறார். படம் பார்ப்பதற்கு முன்பே, தலையைப் பிய்த்துக் கொள்ளவேண்டும் போல இருக்கிறதா ? படம் பாருங்க இன்னும் அதிகமா பிச்சுக்குவீங்க.

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!