Viral video : பிறந்தநாளுக்கு அரிவாளால் கேக் வெட்டி ஊட்டி கொண்டாடிய இளைஞர்கள்!

திண்டிவனம் அருகே இளைஞர் ஒருவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அரிவாளால் கேக் வெட்டி நண்பர்களுக்கு அரிவாளால் கேக்கினை ஊட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுபேட்டை பகுதியை சார்ந்த விஜய் என்ற இளைஞர் தனது பிறந்தநாளை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் தினத்தன்று இரவு நண்பர்கள் பிறந்த நாள் கேக் வெட்டிய போது கையில் அரிவாளை கொண்டு பிறந்த நாள் கேக்கினை வெட்டி நண்பர்களுக்கு அதே அரிவாளாலால் ஊட்டி விட்டுள்ளார்.

இதனை அவருடன் இருந்த நண்பர்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது பிறந்த நாள் அன்று அரிளாலால் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிறந்த நாள் கொண்டாடும் போது கேக்கினை அரிவாளாலால் வெட்டி கொண்டாட வேண்டாம் என தமிழக அரசு எச்சரித்திருந்த நிலையில் இளைஞர்கள் மீண்டும் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடும் நிகழ்வு அரங்கேறியுள்ளது.



வன்முறையை துண்டும் விதமாக அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tap to resize

Latest Videos

click me!