விழுப்புரம் சிறுமியை பெட்ரோல் ஊற்றி துடிதுடிக்க கொன்றது ஏன்..? கைதானர்வர்களின் பகீர் வாக்குமூலம்..!

By vinoth kumar  |  First Published May 12, 2020, 4:29 PM IST

விழுப்புரம் சிறுமி பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 


விழுப்புரம் சிறுமி பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரத்தில், கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூரை அடுத்திருக்கும் சிறுமதுரை காலனியில் வசிக்கும் இவர்கள் விவசாயக் கூலி வேலையும், சொந்தமாக பெட்டிக்கடையும் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மேலும்  இரண்டு ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளைகளும் இருக்கின்றனர்.  தனது வீட்டிலேயே சிறிய பெட்டிக்கடை ஒன்றையும் வைத்து நடத்தி வருகிறார்.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று ஜெயஸ்ரீக்கு நடந்த சம்பவம் தமிழக மக்களையே குலைநடுங்க செய்தது. வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியான ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த இரு நபர்கள்  வாயில் துணி வைத்து, கைகளை காட்டி முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துள்ளனர். அலறல் சத்தம் கேட்டு அக்கபக்கத்தினர் உடனடியாக ஜெயஸ்ரீயை மருத்துவமனையில் சேர்த்தனர். அப்பொழுதும் தன்னை இப்படி செய்து முருகன் மற்றும் கலியபெருமாள் என்னும் இருவர் தான் என ஜெயஸ்ரீ மரண வாக்குமூலம் கொடுத்தார். அதையடுத்து கொடூர மனம் படைத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் 90 சதவீத தீக்காயங்களுடன் இருந்த ஜெயஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். தேசிய அளவில் எதிரொலித்த இந்த சம்பவத்தால் தேசிய குழந்தைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில் முருகன் மற்றும் கலியபெருமாள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ஜெயபால் குடும்பத்துக்கும், எங்களுக்கும் 7 வருஷமா பிரச்சனை இருந்து வருகிறது. அதனால் எங்களுக்கும் அவர்களுக்கும் அடிக்கடி சண்டையும் ஏற்பட்டுள்ளது. நாங்கள் ஆளுங்கட்சியில் இருப்பது தெரிந்தும்கூட ஜெயபாலுக்கு எங்கம் மேல் கொஞ்சம் கூட பயம் வரவில்லை.

இந்நிலையில், தான் முருகன் நிலத்துக்குப் பக்கத்தில் இருக்க்கின்ற ஒரு ஏக்கர் நிலத்தை ஜெயபால் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து சம்பாதிக்க ஆரம்பித்து வந்தார். அதனால் ஜெயபால் மீது எங்களுக்கு இன்னும் கோபம்  அதிகரித்தது. அந்த பிரச்சனையால் தான் 4 மாதங்களுக்கு முன்னர்  தகராறு ஏற்பட்டது. அப்போது ஜெயபாலையும், அவரது மனைவியையும் நாங்கள் கடுமையாக தாக்கினோம். எப்போது எல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போதெல்லாம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தார். 

 

அதேபோல், பிரச்சனை வரும்போது ஜெயபாலின் பெரிய மகள் ஜெஸ்ரீ எங்களை தகாத வார்ததையால் திட்டிவந்தார். அதனால் ஜெஸ்ரீ மீது கடும் கோபத்தில் இருந்து வந்தோம். கடந்த இரண்டு நாளைக்கு முன்னர் அவர்கள் பெட்டி கடையில்  நடந்த சண்டைக்கு நாங்கள் தான் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க குடும்பத்தினர் சென்றனர். 

இந்த சிறுமியை கொலை செய்ய இதுதான் சிரியான தருணம் என்று எண்ணி பெட்டிக்கடையில இருந்த ஜெயஸ்ரீயின் வாயில் துணியை வைத்து அழுத்தி வீட்டுக்குள்ளே இழுத்துக்கொண்டு சென்றோம். பின்னர், கை, கால்களை துணியால் கட்டி பெட்ரோலை ஜெஸ்ரீ மீது ஊற்றி உயிரோடு தீ வைத்து எரித்துவிட்டோம் என்று கூறியுள்ளார். இதனையடுத்து, சிறுமி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதான 2 பேருக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

click me!