சினிமாவை மிஞ்சும் வகையில் கோர விபத்து.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு.!

By vinoth kumar  |  First Published Aug 30, 2021, 11:15 AM IST

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் எபினேஷர் இமான் (28), அவரது தாய், மகன் மற்றும் யுவான், ரபேக்கா உள்பட 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு நேற்றிரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். 


கள்ளக்குறிச்சி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த 6 பேர் உடல்நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர்கள் எபினேஷர் இமான் (28), அவரது தாய், மகன் மற்றும் யுவான், ரபேக்கா உள்பட 6 பேர் காரில் ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு சென்றுவிட்டு நேற்றிரவு சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. அதேவேளையில், சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. பேருந்தை அழகுராஜன்(40), என்பவர் ஓட்டினார்.

Latest Videos

தியாகதுருகம் புறவழிச்சாலை பிரிதிவிமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சுற்றுலா சென்று திரும்பியவர்கள் வந்த காரும், எதிரே வந்த அரசு பேருந்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் பேருந்தின் முன்பக்க அடியில் கார் சிக்கிக்கொண்டது. இதனால் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரை சில அடி தூரத்துக்கு பேருந்து இழுத்து சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.

இந்த கோர விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கார் முற்றிலும் சேதமடைந்து பேருந்து அடியில் சிக்கிக் கொண்டதால் மீட்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து, தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர், கிரைன் மூலம்  கார் மீட்கப்பட்டது. இதனையடுத்து, 6 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கோர விபத்தால் சேலம்-சென்னை புறவழிச்சாலையில் சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டத. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

click me!