தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலி! ஆக்‌ஷனில் இறங்கிய முதல்வர்! விழுப்புரம் எஸ்.பி சஸ்பெண்ட்..!

By vinoth kumarFirst Published May 16, 2023, 9:33 AM IST
Highlights

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பலரது நிலையை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

கள்ளச்சாரயம் விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.  ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்தும், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம்  மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், பலரது நிலையை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதே கள்ளச் சாராயத்தை குடித்த  செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட எஸ்.பி.யாக இருந்த ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் எஸ்.பி.யாக  இருந்த பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக உள்துறை  செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;-  சிபிசிஐடி டிஐஜியாக இருந்த  ஜியாவுல் விழுப்புரம்  டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் எஸ்.பி.யாக இருக்கும் சுதாகருக்கு, செங்கல்பட்டு எஸ்.பி.யாக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கள்ளக்குறிச்சி எஸ்.பியாக இருக்கும் மோகன்ராஜுக்கு, விழுப்புரம் எஸ்.பி-யாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. 

click me!