திருச்சி அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 2003 ஆண்டு முதல் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டிருக்கிறது. ஏழை குடும்பங்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா லாட்டரி விற்பனையை அதிரடியாக தடை செய்தார். அதையும் மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
undefined
இந்த நிலையில் திருச்சி காஜாப்பேட்டை பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. இதனால் அந்த பகுதியில் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒருவர் சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருச்சியில் இருக்கும் காந்திநகரைச் சேர்ந்த பால கிருஷ்ணன் மகன் அருண் குமார் (29) என்பது தெரியவந்தது.
அவரிடம் லாட்டரி சீட்டுகள் இருந்த நிலையில் அவரை காவலர்கள் கைது செய்தனர். இதே போல திருச்சி, தென்னூர் பகுதியில் சிவகுமார் என்பவரும் திருட்டுத்தனமாக லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் சேலத்தில் லாட்டரி விற்பனை நடப்பதாக தகவல் வந்தது குறிப்பிடத்தக்கது.