குட்நியூஸ் சொன்ன சுகாதாரத்துறை செயலாளர்... தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது..!

By vinoth kumar  |  First Published Aug 4, 2020, 10:26 AM IST

தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நட்களாக படிபடியாக குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நட்களாக படிபடியாக குறைய தொடங்கியுள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. தினமும் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,63,222ஆக உயர்ந்துள்ளது. நேற்று மருத்துவமனைகளில் இருந்து 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 2,02,283ஆகவும் அதிகரித்துள்ளது. மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை 4,241 ஆக உயர்ந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- திருச்சியில் முன்பு அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது குறைய தொடங்கியுள்ளது. காய்ச்சல் முகாம் நடத்தி கொரோனா பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து வருகிறோம். திருச்சியில் கொரோனா சிறப்பு மருத்துவமனைகளில் 1302 படுக்கைகள் உள்ளன. தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 50,000 என்ற அளவில் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. தற்போது தான் பொதுமக்கள் கவனமாகவும், அக்கறையுடனும் இருக்க வேண்டும்.

ஏனெனில் பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாகவே கொரோனா படிப்படியாக குறைய துவங்கியுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல், முகக்கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுதல், கை கழுவுவது, முதியவர்கள் மற்றும் நோய்வாய் பட்டவர்களை தனிமையில் வைப்பது போன்ற நடவடிக்கைகளை தவறாது பின்பற்ற வேண்டும். கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கும் போது நோயை கட்டுப்படுத்தலாம். என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

click me!