முழுமையாக 3 நாட்களைத் தாண்டி மீட்பு பணிகள் நடந்த வேளையில், ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரிய வந்தது. இதையத்து குழந்தை உயிரிழந்துவிட்டது என்பதை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். பின்னர் மேலும் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
ஆழ்துளை கிணற்றிலிருந்து 82 மணி நேரம் கழித்து அழகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் பயனற்ற ஆழ்துளை கிணறில் தவறி விழுந்தான். மிகவும் குறுகலான ஆழ்துளை கிணறு என்பதால், குழந்தையை மேலிருந்து மீட்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடியவே, பக்கவாட்டில் பள்ளம் பறித்து சுர்ஜித்தை மீட்க முயற்சிகள் நடந்தன. ஆனால், கடினமான பாறைகள், பள்ளம் தோண்டுவதில் சிரமம் என பல இடையூறுகளை மீட்பு குழுவினர் சந்தித்தனர்.
என்றபோதும் நம்பிக்கை இழக்கமல் மீட்பு பணிகள் தொடர்ந்தன. முழுமையாக 3 நாட்களைத் தாண்டி மீட்பு பணிகள் நடந்த வேளையில், ஆழ்துளை கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவது தெரிய வந்தது. இதையத்து குழந்தை உயிரிழந்துவிட்டது என்பதை வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார். பின்னர் மேலும் 2 மணி நேரம் நடந்த மீட்பு பணியில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
இதனையடுத்து குழந்தையின் உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு 15 நிமிடங்களில் பிரேத பரிசோதனை முடிந்தது. இதனையடுத்து குழந்தை சுர்ஜித்தின் உடல் வீட்டுக்குக்கூட கொண்டு செல்லப்படாமல் மணப்பாறை பாத்திமா நகரில் உள்ள கல்லறை தோட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கே கிறிஸ்தவ முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. இறுதியாக குழந்தை சுர்ஜித்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக குழந்தையின் உடலுக்கு அமைச்சர்கள் விஜய பாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கரூர் எம்.பி. ஜோதிமணி, அரசு அதிகாரிகள், குழந்தையின் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.