சதமடித்து சுட்டெரிக்க போகுது வெயில்..! உஷார் மக்களே..!

By Manikandan S R SFirst Published May 10, 2020, 11:14 AM IST
Highlights

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டிப் பதிவாகக் கூடும். எனவே அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கி கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். வெயிலின் வெப்பத்தை தணிக்கும் விதமாக சில மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. எனினும் அடுத்த சில நாட்களுக்கு வெயில் 100 டிகிரியை தாண்டும் என வானில மையம் எச்சரித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டிப் பதிவாகக் கூடும். எனவே அடுத்து வரும் மூன்று நாள்களுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் காலை 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

சென்னையைப் பொறுத்தவரை பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும். மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தென்மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.

click me!