திருச்சி அருகே பாதுகாப்பு பணிக்கு சென்ற காவல் துறையினரின் வாகனம் மோதி பெண் பலி, இருவர் படுகாயம்

By Velmurugan sFirst Published Feb 2, 2024, 5:37 PM IST
Highlights

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பாதுகாப்பு பணிக்காக சென்ற காவல் துறையினரின் வாகனம் மோதி பெண் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம்,  தொட்டியம்  அடுத்துள்ள சீலைப் பிள்ளையார்புத்தூரில் இரு சமுதாயத்தினரை அவதூராக சித்தரித்து மற்றொரு சமுதாயத்தினர் துண்டு பிரசுரங்கள் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து போராட்டம் நடைபெற்றதால், அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 

இந்நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினரின் வாகனம் ஆற்றம் கரையில் இருந்து  சீலைப்பிள்ளையார் பேருந்து நிலையத்தின் அருகே சென்ற போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த மருதாயி(வயது 45) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 

திருப்பூர் அவிநாசி லிங்கேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் - லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி மனமுருக வழிபாடு

தீனதயாளன்  படுகாயம் அடைந்தார். மேலும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தீபன் மீதும் மோதி காவல்துறையினரின் வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் வாகனத்தை சாய்த்து வாகனத்தின் அடியில் சிக்கிக் கொண்டரை மீட்டனர். காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

17 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கட்டாய உடலுறவில் ஈடுபட்ட சித்தப்பா போக்சோவில் கைது

இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்சி சரக டிஐஜி மனோகரன், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் சென்றனர். முசிறி டிஎஸ்பி யாஸ்மின், ஆய்வாளர் முத்தையா மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு முசிறி கோட்டாட்சியர் ராஜன், தொட்டியம் வட்டாட்சியர் கண்ணாமணி ஆகியோரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர். இந்த விபத்து மற்றும் மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

click me!