ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அறைய சொன்ன மின்வாரிய அதிகாரி இடை நீக்கம்

By Velmurugan sFirst Published Jun 21, 2023, 10:45 AM IST
Highlights

கோவிலுக்கு மின் இணைப்பு கேட்ட கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியரின் சட்டையை பிடித்து கன்னத்தில் அடிக்கும்படி கூறிய மின்வாரிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம் கல்லக்குடி மின்நிலையத்தில் பணியாற்றி வரும் இளநிலை பொறியாளர் (JE) ஸ்ரீதரிடம் கல்லக்குடி புதிய சமத்துவபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அப்பகுதிமக்கள் மின் இணைப்பு வழங்கக் கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்போது மின் இணைப்பு தொடர்பான அனைத்தும் ஆன்லைனில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கலெக்டர் கன்னத்தில் அறைந்து அவனிடம் வாங்கிட்டு வா தருகிறேன் என தரைகுறைவாக பேசியுள்ளார். மேலும் கோயிலுக்கு தானே புண்ணியமா போகும் மின் இணைப்பு கொடுங்கள் என்று கேட்டதற்கு கலெக்டர் சட்டை பிடித்துக் கேளுங்கள் என்று கூறியுள்ளார். 

கலெக்டர் சட்டையை சேர்த்து பிடித்து எழுதி வாங்கி வாருங்கள் நான் அடுத்த நொடியே மின் இணைப்பு தருகிறேன். நீங்கள் வாங்கி வந்தால் உங்கள் கோயிலுக்கு நான் பணம் கட்டுகிறேன் என்றும், வருமானம் முழுவதும் அவனிடம் தான் உள்ளது என கலெக்டரை குறிப்பிட்டு கூறுகிறார். 

விருதுநகரில் ஊராட்சிமன்ற தலைவர் மர்ம மரணம்; உறவினர்கள் சாலை மறியல்

மேலும் கோயில் பேரில் தடையில்லா சான்று கிராம நிர்வாக அலுவலரிடமும், தாசில்தார் இடமும் வாங்கி வா நான் தருகிறேன். நீங்கள் சொல்வதையெல்லாம் நான் எழுதி கொடுக்கவேண்டும் என்றால் நீங்கள் என்ன எனக்கு மாதம் 10 லட்சமா கொடுக்கிறீர்கள் என்று பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு மின்வாரிய அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போதை ஆசாமிகளிடம் தனியாக சிக்கிய பெண் எஸ்ஐ ஐ வறுத்தெடுத்த மது பிரியர்கள் வைரல் வீடியோ

இந்நிலையில் வீடியோவில் சிக்கிய இளநிலை பொறியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

click me!