திருச்சியில் இந்தி எழுத்துகள் அழிப்பு... மத்திய அரசு அலுவலகங்களில் திடீர் சலசலப்பு!

By Asianet TamilFirst Published Jun 9, 2019, 10:12 AM IST
Highlights

திருச்சி விமான நிலையத்துக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை யாரோ அழித்திருக்கிறார்கள். தலைமை தபால் நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது. 
 

திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் எழுதப்பட்டிருந்த  இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தி பேசாத மாநிலங்களில் தொடக்கப் பள்ளிகளில் இந்தியை 3-வது மொழிப்பாடமாக கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்தி திணிப்பை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த அறிவிப்பில் மத்திய அரசு திருத்தம் செய்தது.

 
இந்நிலையில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருச்சியில் உள்ள மத்திய அரசு அலுவலங்களில் இந்தி மொழியை கறுப்பு மை பூசி மர்ம ஆசாமிகள் அழிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்துக்கு வெளியே உள்ள அறிவிப்பு பலகையில் இருந்த இந்தி எழுத்துகளை யாரோ அழித்திருக்கிறார்கள். தலைமை தபால் நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகங்களிலும் இந்தி எழுத்துகளை கறுப்பு மை பூசி அழிக்கப்பட்டுள்ளது.

 
இரு மொழி கொள்கையை ஆதரிக்கும் வகையில் அந்தப் பலகைகளிலிருந்து தமிழ், ஆங்கில மொழிகள் அழிக்கப்படாமல் அப்படியே இருந்தது. இந்தி எழுத்துகள் அழிக்கப்பட்டிருப்பதைக் கண்ட ஊழியர்கள் போலீஸுக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்துவருகிறார்கள். சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து இந்தி எழுத்துகளை அழித்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். 

click me!