திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவாக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
நாடு முழுவதும் நேற்று முதல் கொரோன தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். தமிழகத்தில் மொத்தம் 166 தடுப்பூசி செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு மையத்திலும் நாள் ஒன்றுக்கு தலா 100 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நேற்று மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி 2,783 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
undefined
2ம் நாளான இன்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை பாவையிட்டு ஆய்வு செய்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்;- தமிழகத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. முதல்நாள் தடுப்பூசி போடும் திட்டத்தில் மதுரையில் அதிகமானோருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
விருப்பமுள்ளவர்கள் தாங்களாக முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பு மருந்தும் பாதுகாப்பானது தான். தடுப்பூசி போடும் திட்டம், இலக்கு நோக்கிய திட்டம் அல்ல என கூறியுள்ளார்.