உலகப்புகழ் ஸ்ரீரங்கம் கோவிலில் சிலைத் திருட்டு..! விசாரணையில் சிக்கிய அறநிலையத்துறை அதிகாரி..!

By Manikandan S R S  |  First Published Dec 13, 2019, 3:44 PM IST

ஸ்ரீரங்கம் கோவில் சிலைத் திருட்டு சம்பந்தமான வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


திருச்சி மாவட்டத்தில் இருக்கிறது ஸ்ரீ ரங்கம். இங்கிருக்கும் ரங்கநாத பெருமாள் ஆலயம் உலகப்புகழ் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தினமும் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதனிடையே இந்த கோவிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக தொடர்ந்த புகார் எழுந்து வந்தது. ஆகம விதிகளை மீறி கோவில் நிர்வாகம் செயல்படுவதாக பக்தர்கள் சிலர் கூறி வந்தனர்.

Tap to resize

Latest Videos

undefined

இதுதொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜ நரசிம்மன்(49) என்பவர் Shri Rama Banam என்னும் தனது முகநூல் பக்கத்தில் தொடர்ச்சியாக பல்வேறு குற்றசாட்டுகளை கூறிவந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் இருக்கும் மூலவர் ரங்கநாதர், உற்சவர் நம்பெருமாள் ஆகிய சிலைகள் போலியானது என்றும் அவை மாற்றப்பட்டு இருக்கின்றன என்றும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி சிலைதடுப்பு கடத்தல் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உட்பட 6 பேர் மீது 4  பிரிவுகளின் கீழ் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் சிலர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும் என்று தெரிகிறது. இதனிடையே சிலைகடத்தல் குறித்து விசாரணை நடத்துவதற்காக புலன் விசாரணை அதிகாரியாக காவல்துறை கண்காணிப்பாளர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

click me!