தமிழகத்தில் அசுர வேகமெடுத்த கொடூர கொரோனா..! மாவட்ட வாரியாக முழு விபரம்..!

By Manikandan S R S  |  First Published May 20, 2020, 9:56 AM IST

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறையாமல் வெளி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை விளைவித்திருக்கும் நிலையில் பரிசோதனைகள் அதிகம் நடப்பதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்வதாக அரசு விளக்கமளித்திருக்கிறது.


இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,488 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,466 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 4,895 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 84 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் எகிறும் வரும் பாதிப்பு தற்போது 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் தினமும் பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறையாமல் வெளி வருகிறது. இது மக்களிடையே அச்சத்தை விளைவித்திருக்கும் நிலையில் பரிசோதனைகள் அதிகம் நடப்பதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்வதாக அரசு விளக்கமளித்திருக்கிறது. தற்போது வரை மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின் வருமாறு:

சென்னை - 7,672
திருவள்ளூர் - 571
செங்கல்பட்டு - 560
கடலூர் - 420
அரியலூர் - 355
விழுப்புரம் - 311
திருநெல்வேலி - 226
காஞ்சிபுரம் - 208
மதுரை - 163
திருவண்ணாமலை - 155
கோவை - 146
பெரம்பலூர் - 139
திண்டுக்கல் - 126
திருப்பூர் - 114
கள்ளக்குறிச்சி - 111
தூத்துக்குடி - 91
தேனி - 89
ராணிப்பேட்டை - 84
கரூர் - 79
நாமக்கல் - 77
தஞ்சாவூர் - 75
தென்காசி - 72
ஈரோடு - 70
திருச்சி - 68
விருதுநகர் - 55
நாகை - 51
கன்னியாகுமரி - 49
சேலம் - 49
ராமநாதபுரம் - 39
வேலூர் - 34
திருவாரூர் - 32
திருப்பத்தூர் - 29
சிவகங்கை - 26
கிருஷ்ணகிரி - 20
நீலகிரி - 14
புதுக்கோட்டை - 7
தர்மபுரி - 5

விமான நிலைய தனிமைப்படுத்தல் - 54
ரெயில் நிலைய தனிமைப்படுத்தல் - 2

click me!