இனி கையில் துப்பாக்கி இருக்கணும்.. தற்காப்புக்கு சுடுங்க... போலீசாருக்கு டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு..!

By vinoth kumarFirst Published Nov 23, 2021, 1:41 PM IST
Highlights

மறைந்த எஸ்ஐ பூமிநாதன் இல்லத்துக்கு இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபு அங்கு வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் படத்துக்கு மல்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். 

ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள்பாதுகாப்பிற்காக கைத்துப்பாக்கிகள் எடுத்துச் செல்லலாம் என்று தமிழக டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்தவா் எஸ். பூமிநாதன். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடு திருடா்களை விரட்டிச் சென்றபோது அரிவாளால் வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க  4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். 

இந்நிலையில், கொலையில் தொடா்புடையவா்கள் தஞ்சை மாவட்டம் கல்லணை அருகேயுள்ள தோகூரைச் சோ்ந்த பன்னீர்செல்வம் மகன் மணிகண்டன் (19), அவரது உறவினா்களான புதுகையைச் சோ்ந்த 5, 9 ஆம் வகுப்பு பயிலும் சிறார்கள் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து இருசக்கர வாகனம் மற்றும் அரிவாளையும் காவலர்கள் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மணிகண்டன் கீரனூா் குற்றவியல் நடுவா் மன்றத்திலும், 2 சிறார்களும் புதுக்கோட்டையிலுள்ள சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் 24 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைப் காவலர்கள் கைது செய்தனர்.

இந்நிலையில், மறைந்த எஸ்ஐ பூமிநாதன் இல்லத்துக்கு இன்று காலை டிஜிபி சைலேந்திர பாபு அங்கு வைக்கப்பட்டிருந்த பூமிநாதன் படத்துக்கு மல்தூவி மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தாருக்கும் நேரில் ஆறுதல் கூறினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திர பாபு;- பூமிநாதன் ஏற்கனவே தீவிரவாத தடுப்புப் பயிற்சியில் ஈடுபட்டவர். சிறப்பாக பணியாற்றியமைக்காக முதல்வர் பதக்கத்தையும் பெற்றவர். காவல்துறையினர் ரோந்துப் பணிக்குச் செல்லும் போது ஆயுதங்களைக் கொண்டு செல்ல வேண்டும். தற்காப்புக்காக காவலர்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது  என்று கூறினார்.

click me!