காவல்நிலையத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய கணவர்..! திருவாரூரில் பரபரப்பு..!

Published : Nov 18, 2019, 02:29 PM IST
காவல்நிலையத்தில் மனைவியை கத்தியால் சரமாரியாக குத்திய கணவர்..! திருவாரூரில் பரபரப்பு..!

சுருக்கம்

திருவாரூர் அருகே காவல்நிலையத்தில் வைத்து மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி பத்மாவதி. கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு நடந்து வந்துள்ளது. இதன்காரணமாக கணவரிடம் கோபித்துக்கொண்டு பத்மாவதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவரை பல இடங்களில் தேடி பார்த்த வீரமணி, மனைவியை காணவில்லை என்று திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். 

இதனிடையே கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளிக்க பத்மாவதி வழக்கறிஞர் ஒருவருடன் காவல்நிலையத்திற்கு வந்துள்ளார். அவரது புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் விசாரணைக்காக வீரமணியை அழைத்தனர். இதையடுத்து திருவாரூர் தாலுகா காவல்நிலையத்திற்கு அவர் வந்துள்ளார். காவலர்கள் விசாரணை நடத்தும்போதும் வீரமணி மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை காவலர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தநிலையில் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த வீரமணி, காவல்நிலையத்தின் வெளியே தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பத்மாவதியை சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி சரிந்து விழுந்தார். பின் அதே கத்தியால் வீரமணி தன்னையும் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த காவலர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்நிலையத்தில் வைத்தே மனைவியை கத்தியால் குத்திய கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையுடன் UPSC , TNPSC படிக்க இலவச பயிற்சி : தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…