2 நாள் பயணமாக திருவாரூர் சென்றுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் திருவாரூர் அருகே மடப்புரத்தில் தரை தளத்துடன் கூடிய மேற்கூரை அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2 நாள் பயணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு க. ஸ்டாலினுக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில்வெண்ணியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ புத்தகம் வழங்கி வரவேற்றார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம் எல் ஏ தலைமையில் டிஆர்பி .ராஜா எம்எல்ஏ உட்பட ஏராளமான திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட பத்திரிகையாளர்களால் பரபரப்பு
undefined
தொடர்ந்து திருவாரூர் சன்னதி தெரு இல்லத்துக்கு வந்து ஓய்வெடுத்த பின்னர் மாலை காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சு கருத்தம்மாள் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து திமுக அறக்கட்டளை மூலம் ரூ.12 கோடி மதிப்பீட்டில் 7000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கலைஞர் அருங்காட்சியகத்தை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து திருவாரூர் அருகே மடப்புரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணொளி காட்சி வாயிலாக சென்னையில் இருந்து திறந்து வைக்கப்பட்ட ரூ.2.95 கோடி மதிப்பிலான தரை தளத்துடன், மேற்கூரை அமைக்கப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கை ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து துர்காலயா சாலை வழியாக சென்றபோது, அவ்வழியாக ரஞ்சித் குமார் துர்கா தேவி என்ற தம்பதியினர், அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில் தங்களது மகன் ருத்ரனின் முதலாம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடிவிட்டு குழந்தையை தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதனை அறிந்த முதல்வர் காரை நிறுத்திவிட்டு இறங்கி வந்து குழந்தையை கொஞ்சியதுடன் பிறந்தநாள் பரிசும் வழங்கினார்.