டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து; இருவர் பலி ஒருவர் படுகாயம்

Published : May 17, 2023, 03:31 PM IST
டிராக்டர் மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்து; இருவர் பலி ஒருவர் படுகாயம்

சுருக்கம்

திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வரம்பியம் கீழத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது மகன் தினேஷ் (வயது 21) மற்றும் அதே தெருவை சேர்ந்த வசந்தகுமார் (21), பரமேஸ்வரன் (20) ஆகிய மூன்று பேரும் பள்ளாங்கோவில் கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவை காண்பதற்காக திருத்துறைப்பூண்டியில் இருந்து பள்ளாங்கோவில் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். 

அப்போது முன்னே ஹாலோ பிளாக் ஏற்றிக்கொண்டு சென்ற டிராக்டரை வளைவில் முந்தி செல்ல முற்பட்டுள்ளனர். அப்போது எதிரே அரசு பேருந்து வந்ததால் திடீரென்று பிரேக் அடித்துள்ளனர். அப்போது நிலை தடுமாறி பின்னே வந்த டிராக்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் மற்றும் வசந்த் உயிரிழந்தனர். மேலும் பரமேஸ்வரன் படுகாயங்களுடன் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

திருச்சி காந்தி மார்க்கெட் கடையில் பெண் விஏஓ தனது உறவினர்களுடன் தாக்குதல் 

மேலும் இச்சம்பவம் குறித்து திருத்துறைப்பூண்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அவரது உறவினர்கள் அழும் காட்சி காண்பவர்கள் கண் கலங்க வைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்திருப்பது அந்தப் பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்ததில் ஒருவர் உயிரிழப்பு

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையுடன் UPSC , TNPSC படிக்க இலவச பயிற்சி : தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?
திருவாரூர் மாவட்ட சத்துணவு மையங்களில் வேலைவாய்ப்பு: 163 பணியிடங்களுக்கு உடனே விண்ணப்பிக்கவும்…