பரிமளா அப்பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் அடைக்க முடியவில்லை. இதனால், பணம் கொடுத்த தனசேகர் மற்றும் அவரது தயாரும் சேர்ந்து கடந்த 22ம் தேதி பரிமளா வேலை செய்யும் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
கந்துவட்டி கொடுமையால் அவினாசி பெண் தற்கொலை செய்து சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த ராயம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி பரிமளா (30). இவர்களுக்கு தட்சின் (14) என்ற மகனும் தேவதர்சினி (12) என்ற மகளும் உள்ளனர். பரிமளா அவினாசி பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த சுகாதார ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், பரிமளா திடீரென வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரிமளா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பரிமளா அப்பகுதியை சேர்ந்த தனசேகர் என்பவரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். இதனை குறிப்பிட்ட நாட்களுக்குள் அடைக்க முடியவில்லை. இதனால், பணம் கொடுத்த தனசேகர் மற்றும் அவரது தயாரும் சேர்ந்து கடந்த 22ம் தேதி பரிமளா வேலை செய்யும் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த பரிமளா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, பரிமளாவின் கணவருக்கு அரசு வேலை, நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும், தற்கொலைக்கு காரணமாக தனசேகர் மற்றும் அவரின் தாய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கூறி சடலத்தை வாங்க மறுத்து அவரின் உறவினர்கள் மற்றும் தலித் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.