திருப்பூர் அருகே பெண் காவலர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் அருகே பெண் காவலர் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது மகள் பர்வின் பாவி வயது (23). இவர் 2017-ம் ஆண்டு தமிழக போலீசில் சேர்ந்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் திருப்பூர் மாவட்ட போலீசில் பணியாற்றி வருகிறார். இந்த பெண் காவலர் திருநகர் பகுதியில் தனது தாயுடன் வசித்து வந்தார். நேற்று பல்லடம் தாலுகா அலுவலகத்தில் மிண்ணனு வாக்கு பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மதியம் 2:30 மணி அளவில் பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.
undefined
இந்நிலையில் நேற்று இரவு திடீரென கையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து உள்ளார். உடனே மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாகவே காவல்துறையினர் தற்கொலை சம்பவங்கள் தொடர்ந்துவரும் நிலையில், பர்வீன் பாவியின் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பனிச்சுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது காதல் விவகாரமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.