தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியான நிலையில், திருப்பூரில் மட்டும் 28 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் முழு விவரத்தை பார்ப்போம்.
தமிழ்நாடு சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் தீவிரமான துரித நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது. பரிசோதனை எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக அதிகப்படுத்தப்பட்ட போதிலும், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக் குறைந்திருக்கிறது.
undefined
இன்று ஒரே நாளில் 5363 கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் வெறும் 49 பேருக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்களில் 28 பேர் திருப்பூரை சேர்ந்தவர்கள். மற்ற 33 மாவட்டங்களிலும் சேர்த்தே வெறும் 21 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 1372ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:
சென்னை - 235
கோவை - 128
திருப்பூர் - 108
ஈரோடு - 70
திண்டுக்கல் - 69
நெல்லை - 60
செங்கல்பட்டு, நாமக்கல் - 50
திருச்சி, திருவள்ளூர் - 46
மதுரை - 44
தேனி - 43
கரூர் - 42
நாகை - 40
ராணிப்பேட்டை - 39
தஞ்சாவூர் - 36
தூத்துக்குடி, விழுப்புரம் - 26
சேலம் - 24
வேலூர் - 22
திருவாரூர் - 21
கடலூர் - 20
தென்காசி - 18
திருப்பத்தூர், விருதுநகர் - 17
கன்னியாகுமரி - 16
திருவண்ணாமலை - 12
சிவகங்கை - 11
ராமநாதபுரம் - 10
நீலகிரி - 9
காஞ்சிபுரம் - 8
பெரம்பலூர் - 4
கள்ளக்குறிச்சி - 3
அரியலூர் - 2.
தர்மபுரி, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இல்லை.