அதிர்ச்சி செய்தி... அரசு பள்ளியில் 3 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு.. மருத்துவமனையில் சிகிச்சை..!

By vinoth kumarFirst Published Jan 26, 2021, 7:03 PM IST
Highlights

முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து அவர்களுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகள், 10 மாதங்களுக்குப் பிறகு கடந்த 19-ம் தேதி திறக்கப்பட்டன. பொதுத்தேர்வை எழுத உள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வகுப்புக்கு 25 மாணவர்கள், கட்டாய முகக்கவசம், தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலைப் பரிசோதனை உள்பட கொரோனா விதிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகள் இயங்கி வருகின்றன. 

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வந்தது. பள்ளியில் மாணவர்களுக்கு கடந்த 23ம் தேதி கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் வெளியானது. இதில், பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 

இதனையடுத்து, அவர்கள் 3 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, பள்ளி வளாகத்தில் மருந்துகள் தெளிக்கப்பட்டு சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே  சேலம் மாவட்டத்தில் ஒரு ஆசிரியை, 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!