திருப்பூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த மாணவி லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் வஞ்சி பாளையம் அடுத்த முருகம்பாளையம், எஸ்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிங்கராஜ். எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் தன்ஷிகா தனியார் பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வந்தார். தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தன்ஷிகாவும் தனது தேர்வை எழுதி இருந்தார்.
தேர்வெழுதிய மாணவி வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது வஞ்சிபாளையம் அரசு பள்ளியில் பயிலும் தங்கையை அழைத்து வர இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். வஞ்சி பாளையம் நால்ரோடு பகுதியில் எதிரே வேகமாக வந்த டிப்பர் லாரி எதிர் பாராத விதமாக தன்ஷிகாவின் இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
காதலனை கரம் பிடித்த கையோடு தமிழக ஸ்டைலில் குத்தாட்டம் போட்ட வெளிநாட்டு பெண்
இந்த விபத்தில் படுகாயமடைந்த தன்ஷிகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை கைது செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.