அரசு பேருந்தில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தடை... சுற்றறிக்கை அனுப்பிய அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்..!

By vinoth kumar  |  First Published Jun 25, 2019, 1:26 PM IST

அரசு பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 10 ரூபாய் நாணயத்தை வாங்கக்கூடாது என நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் கிளை மேலாளர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 


அரசு பேருந்துகளில் பயணிகளிடமிருந்து 10 ரூபாய் நாணயத்தை வாங்கக்கூடாது என நடத்துனர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் கிளை மேலாளர் அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

மத்திய அரசு, 2016-ம் ஆண்டு ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பண மதிப்பிழப்பு சட்டத்தைக் கொண்டு வந்ததையடுத்து, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து, 10 ரூபாய் நாணயங்களும் இனி செல்லாது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதனால், அரசுப் பேருந்துகள் தொடங்கி அரசின் அனைத்துத்துறைகளும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்துவருவதால், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, புழக்கத்தில் உள்ள அனைத்து 10 ரூபாய் நாணயங்களும் செல்லும் என்றும் ரிசர்வ் வங்கி விளக்கமளித்திருந்தது. ஆனாலும், சென்னையில் மட்டுமே 10 ரூபாய் நாணயங்களை வாங்குகிறார்கள். மற்ற இடங்களில் வாங்க மறுக்கிறார்கள். 

Tap to resize

Latest Videos

undefined

இந்நிலையில், திருப்பூர் போக்குவரத்து பணிமனையில் பணிபுரியும் நடத்துநர்கள் யாரும் பயணிகள் தரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்குவதை முடிந்தவரை தவிர்க்குமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இது சமூகவலைத்தளங்களில் வைரலானது. பின்னர், இந்த சுற்றறிக்கையை திருப்பூர் போக்குவரத்து பணிமனை திரும்பப் பெற்றது. 

இந்நிலையில், இச்சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் கிளை மேலாளர் தனபால் நேற்று அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார். நிர்வாகத்திடம் எந்த ஒப்புதலும் பெறாமல், தன்னிச்சையாக அனுப்பியுள்ளார். அத்துடன், பொதுமக்களிடம், அரசு போக்குவரத்து கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளார். எனவே, இந்த சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதுடன், இதற்கு காரணமாக இருந்த திருப்பூர் - 2 கிளை மேலாளர் தனபால் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மேலாண்மை இயக்குநர் அறிக்கையில் கூறியுள்ளார். 

click me!