உங்கள் தொகுதியின் நிலை என்னனு உங்களுக்கே தெரியாதா? பொதுமக்களிடம் வசமாக சிக்கிய எம்எல்ஏ ரூபி மனோகரன்

By Velmurugan s  |  First Published Jun 14, 2024, 7:50 PM IST

நாங்குநேரி பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த எம்எல்ஏ ரூபி மனோகரனை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இதனால் பதில் சொல்ல முடியாமல் திணறிய எம்எல்ஏ அங்கிருந்து அவசரமாக புறப்பட்டுச் சென்றார்.


திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் இன்று மாலை நாங்குநேரி பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள கழிவறையை ஆய்வு செய்ய வந்தார். அப்போது 3 வருடங்களாக பழுதடைந்து கிடக்கும் பேருந்து நிலைய கழிவறையை சரி செய்ய வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

அப்போது நாங்குநேரி ஊருக்குள் நீண்ட நாட்களுக்கு பிறகு எம்.எல்.ஏ வந்ததை அறிந்த நாங்குநேரி ஊர் பொதுமக்கள் மற்றும் பேருந்து நிலையத்தில் இருந்த பெண்களும் எம்எல்ஏ., ரூபி மனோரனை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர். நாங்குநேரி ஊருக்குள் முறையாக அரசு பேருந்துகள் வரவில்லை எனவும், பெரும்பாலான பேருந்துகள் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன. அனைத்து அரசு பேருந்துகளும் நாங்குநேரி ஊருக்குள் வந்து செல்ல உங்களிடமும், போக்குவரத்தை துறை சார்ந்த அதிகாரிகளிடமும் பல முறை நேரில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. பேருந்தே வராத பேருந்து நிலையத்திற்கு கழிவறை எதற்கு?  என பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 

Tap to resize

Latest Videos

undefined

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் மசூதி, தேவாலயம்? திமுகவுக்கு தெம்பும், திராணியும் உள்ளதா - ஜீயர் சவால்

அப்போது அங்கு நின்ற ஒரு பெண் பயணி பக்கத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டிக்கு கூட உரிய பேருந்து வசதி இல்லாததால் தினமும்  காலை, மாலையில் ஒன்றை மணி நேரம் பேருந்து நிலையத்தில் காத்துக் கிடக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எங்களுக்கு இலவச பேருந்து வேண்டாம், இலவச பேருந்தால் தனியார் பேருந்துகளை நிறுத்தி விட்டனர். இலவச பேருந்தும் முறையாக வருவதில்லை. இதனால் உரிய இடங்களுக்கு சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.

மேலும் அங்கிருந்த பெண்கள் சிலர் அரசு பேருந்துகள் ஊருக்குள் வராமல் செல்வதுடன், எங்களை அரசு போக்குவரத்து கழகம் மனிதர்களாகவே மதிக்கவில்லை எனவும் நாங்குநேரி ஒதுக்கப்பட்ட ஊராக மாறி விட்டதாகவும் எம்எல்ஏ.விடம் நேரில் குற்றம் சாட்டினர். 

Crime: தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்ட பச்சிளம் குழந்தை; அரியலூரில் பரபரப்பு சம்பவம்

தொடர்ந்து நாங்குநேரி தொகுதியின் தலைநகரமாக இருந்தும் நாங்குநேரிக்கு குளிரூட்டப்பட்ட பேருந்துகள் முதல் சாதாரண பேருந்துகள் வரை எந்த பேருந்தும் வருவதில்லை. இந்த அவல நிலை உங்கள் தொகுதிக்கு  ஏற்பட்டுள்ளது. இது உங்களுக்கு தெரியவில்லையா? என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து எம்எல்ஏ., ரூபி மனோரன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசுவதாக கூறி விட்டு அவசர அவசரமாக அங்கிருந்து நழுவி காரில் புறப்பட்டு சென்றார்.

click me!