17 மாவட்டவங்களில் கொடூரம் காட்டும் கொரோனா..! பாதிப்புகள் கிடுகிடு உயர்வு..!

By Manikandan S R SFirst Published May 21, 2020, 11:09 AM IST
Highlights

இதுவரை தமிழகத்தில் 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளது. நேற்று மட்டும் 11,894 பேருக்கு பரிசோதனைகள் நடந்திருப்பதாக சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 8,496 ஆண்களும் 4,692 பெண்களும் 3 திருநங்கைகளும் அடங்கியுள்ளனர். 

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்திலும் உச்சம் அடைந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,191 ஆக உயர்ந்திருக்கிறது. இன்றைய நிலவரப்படி 7,219 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 5,882 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 87 உயிர்களை கொரோனா வைரஸ் காவு வாங்கி இருக்கிறது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் சென்னையில் எகிறும் வரும் பாதிப்பு தற்போது 8 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 557 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து தலைநகரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,228 ஆக அதிகரித்துள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும் கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை 500க்கு குறையாமல் வெளி வருகிறது. நேற்று 17 மாவட்டங்களில் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது.

இது மக்களிடையே அச்சத்தை விளைவித்திருக்கும் நிலையில் பரிசோதனைகள் அதிகம் நடப்பதன் காரணமாகவே பாதிப்பு எண்ணிக்கைகள் உயர்வதாக அரசு விளக்கமளித்திருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 3,60,068 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளது. நேற்று மட்டும் 11,894 பேருக்கு பரிசோதனைகள் நடந்திருப்பதாக சுகாதரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 8,496 ஆண்களும் 4,692 பெண்களும் 3 திருநங்கைகளும் அடங்கியுள்ளனர். தற்போது வரை மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பின் வருமாறு:

சென்னை - 8,228
செங்கல்பட்டு - 621
திருவள்ளூர் - 594
கடலூர் - 420
அரியலூர் - 355
விழுப்புரம் - 318
திருநெல்வேலி - 242
காஞ்சிபுரம் - 223
மதுரை - 172
திருவண்ணாமலை - 166
கோவை - 146
பெரம்பலூர் - 139
திண்டுக்கல் - 127
திருப்பூர் - 114
தூத்துக்குடி - 113
கள்ளக்குறிச்சி - 112
தேனி - 92
ராணிப்பேட்டை - 84
கரூர் - 79
நாமக்கல் - 77
தஞ்சாவூர் - 76
தென்காசி - 75
ஈரோடு - 70
திருச்சி - 68
விருதுநகர் - 61
நாகை - 51
கன்னியாகுமரி - 49
சேலம் - 49
ராமநாதபுரம் - 39
வேலூர் - 34
திருவாரூர் - 32
திருப்பத்தூர் - 29
சிவகங்கை - 26
கிருஷ்ணகிரி - 21
நீலகிரி - 14
புதுக்கோட்டை - 13
தர்மபுரி - 5

விமான நிலைய தனிமைப்படுத்தல் - 54
ரெயில் நிலைய தனிமைப்படுத்தல் - 3

click me!