அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ திடீர் மரணம்..!

By Manikandan S R S  |  First Published Jan 3, 2020, 10:50 AM IST

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சக்திவேல் முருகன் காலமானார்.


திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் முருகன். இவர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக அதிமுக சார்பாக கடந்த 2001 முதல் 2006 வரை செயல்பட்டு வந்தார். அம்பாசமுத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் மதுரா கோட்ஸ் மில்லில் அதிமுக தொழிற்சங்க தலைவராகவும் இருக்கிறார். மேலும் அதிமுகவில் மாவட்ட அளவில் பல முக்கிய பொறுப்புகளையும் வகித்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று காலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக சக்திவேல் முருகன் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு கட்சியினர் பெருமளவில் குவிந்து வருகின்றனர். இன்று மாலை இறுதிச்சடங்குகள் நடக்க இருக்கிறது.

Tap to resize

Latest Videos

click me!