குளுகுளு குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்...!

By vinoth kumarFirst Published Jun 25, 2019, 6:09 PM IST
Highlights

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். 

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதங்கள் சீசன் காலங்கள் ஆகும். இதில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். சீசனை அனுபவிப்பதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். ஆனால் சீசன் இந்த மாதம் இன்னும் சரிவர தொடங்கவில்லை. முதல் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அதன் பின்னர் சீசன் மிகவும் மந்தமாகவே காணப்படுகிறது. 

கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் குற்றாலம் அருவிகளில் ஓரளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. நேற்று குற்றாலத்தில் வெயிலே இல்லை. சாரல் மழை விட்டு விட்டு தூறிக் கொண்டே இருந்தது. குளிர்ந்த காற்று வீசியது. மெயி்ன் அருவி, ஐந்தருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து காணப்பட்டது. கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடர்வதால், குற்றாலத்தில், சீசன் களைகட்ட வாய்ப்புள்ளது.

click me!