தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி ( 18) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காதலி கண் முன்னே காதலன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன் குமார் (29). இவர் தனியார் செல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் கோம்பையை சேர்ந்த அன்னபூரணி ( 18) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
தினமும் ஜெகன்குமார் அன்னபூரணியை இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி நேற்று இரவு இருவரும் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது உத்தமபாளையம் சாலையில் எதிரில் வந்த அரசு பேருந்து ஜெகன்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட ஜெகன்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
அன்னபூரணி படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சின்னமனூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர், மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி கண் முன்னே காதலன் விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.