போன முறை ஓட்டு போட்ட எங்களுக்கு இந்த முறை வாக்குகள் இல்லைனா எப்படி? வாக்குச்சாவடி முற்றுகையால் பரபரப்பு!

By vinoth kumar  |  First Published Apr 19, 2024, 2:51 PM IST

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் உப்புக்கோட்டை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர்களாக உள்ளனர். 


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உப்புக்கோட்டை கிராமத்தில் சுமார் 80-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு வாக்கு இல்லை என புகார் தெரிவித்து வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு  வாக்குவாதம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உப்புக்கோட்டை ஊராட்சி அமைந்துள்ளது. இந்தப் உப்புக்கோட்டை ஊராட்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாக்காளர்களாக உள்ளனர். உப்புக்கோட்டை கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் வாக்குச்சாவடி எண் 133 மாற்றும் 136 ஆகிய  வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு காலை முதலே பொதுமக்கள் வாக்களித்து வந்தனர்.

Latest Videos

undefined

இந்நிலையில் இதே பகுதி சேர்ந்த சுமார் 80க்கும் மேற்பட்டோருக்கு வாக்குகள் செலுத்த வந்த நிலையில் அவர்களுக்கு வாக்கு இல்லை என தெரிவித்ததால் தற்போது வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு தேர்தல் அலுவலர்களுடன் வாக்குவாதம் செய்து வருகின்றனர். ஒரே குடும்பத்தில் நான்கு பேர் உள்ள நிலையில் அவர்களின் இரண்டு பேருக்கும் மட்டும் வாக்குகள் இருக்கின்றது என்றும் மீதமுள்ள இரண்டு பேருக்கு வாக்குகள் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர்

மேலும் உப்புக்கோட்டை ஊராட்சியை சேர்ந்த ஏழாவது வார்டு உறுப்பினராக இருக்கும் பாண்டீஸ்வரி என்பவருக்கும் வாக்கு இல்லை எனக் கூறப்படுகிறது. அதேபோல் இறந்தவர்களின் வாக்குகள் நீக்கப்படாமல் அவர்களுக்கு வாக்கு இருப்பதாகவும் தங்களுக்கு வாக்குகள் இல்லை என புகார் தெரிவிக்கின்றனர். கடந்த முறை தேர்தலில் நாங்கள் அனைவரும் வாக்கு செலுத்தினோம் என்றும் இந்த முறை தங்களுக்கு வாக்குகள் இல்லை என கூறுகின்றனர். 

இதுகுறித்து போடி தாசில்தாருக்கு புகார் தெரிவித்தும் இதுவரை சம்பவ இடத்திற்கு வருகை தராமல் இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர். மேலும் எங்களுக்கு வாக்கு செலுத்தும் வரை நாங்கள் இந்த பகுதியை விட்டு செல்ல மாட்டோம் என்றும் கூறி வாக்குச்சாவடி முன்பாக நின்று வாக்குவாதம் செய்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!