பேசிக்கொண்டிருந்தபோது திடீரென வெடித்த செல்போன்; இளம் பெண் உடல் கருகி பலி

By Velmurugan s  |  First Published Sep 27, 2023, 5:46 PM IST

தஞ்சையில் சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம் பெண் செல்போன் வெடித்து உடல் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.


தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வந்தவர் கோகிலா(வயது 32). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வந்தார். இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை  நடத்தி வந்தார். 

வழக்கம்போல கடைக்கு வந்தவர் தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளார். அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து  கடை  தீ பற்றி எரிந்தது. கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். 

Tap to resize

Latest Videos

undefined

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல சித்தரிக்கின்றனர் - ஜவாஹிருல்லா வேதனை

இருப்பினும் கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீயில் கருகி பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

சூடுபிடிக்கும் கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்; குற்றவாளிகள் நேரில் அழைத்து வரப்பட்டு விசாரணை

click me!