அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்மாபேட்டை பெண்கள் மேல்நிலை பள்ளியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கும், சக மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 11-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இந்நிலையில், இன்று மேலும் 41 மாணவிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, பள்ளிக்கு இரு வாரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்னும் 200க்கும் மேற்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.