
திருவையாறு அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து மின் கம்பி மீது உரசி மின்சாரம் தாக்கியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தனியார் பேருந்து ஒன்று தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்தானது வரகூர் கிராமத்தின் அருகே சாலையில் உள்ள மின்சார மின் கம்பி மீது பேருந்து உரசி உள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்.
இது தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பள்ளத்தில் சிக்கி கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. அதிகப்படியான பயணிகள் இல்லாத காரணத்தினால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.