தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்த கோயில் சிற்பங்கள், சுதைகள், 4 அடி அஸ்திவாரத்தில் 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரம், அதிலுள்ள 80 டன் கருங்கல், ஒரே கல்லால் நந்தி பகவான், கரூவூரார் சித்தர், 4 அடி அகலம், 8 அடி உயரத்தில் உள்ள வாசலுக்குள் 16 அடி உயரத்தில், 56 அடி சுற்றளவு கொண்ட மூலவர் சிவன் உள்ளிட்டவைகள் உலக புகழ்பெற்றதாகும். 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் என்பதால் சுற்றி பார்ப்பதற்கு வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினம்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
பூங்காவை தொடர்ந்து தஞ்சை பெரிய கோவிலுக்கு வரும் காதலர்கள் சிலர் கோவில் பிரகாரங்களில் அமர்ந்து எல்லை மீறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதுதொடர்பாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
undefined
தஞ்சை பெரிய கோயில் உலக புகழ்பெற்ற யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்த கோயில் சிற்பங்கள், சுதைகள், 4 அடி அஸ்திவாரத்தில் 216 அடி உயரம் கொண்ட மூலவர் கோபுரம், அதிலுள்ள 80 டன் கருங்கல், ஒரே கல்லால் நந்தி பகவான், கரூவூரார் சித்தர், 4 அடி அகலம், 8 அடி உயரத்தில் உள்ள வாசலுக்குள் 16 அடி உயரத்தில், 56 அடி சுற்றளவு கொண்ட மூலவர் சிவன் உள்ளிட்டவைகள் உலக புகழ்பெற்றதாகும். 1,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயில் என்பதால் சுற்றி பார்ப்பதற்கு வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் தினம்தோறும் அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இக்கோவிலுக்குள் வரும் காதலர்கள் சிலர், கோவில் பிரகார தூண்கள் மறைவிடத்தில் தஞ்சம் அடையும் ஜோடிகள் சிலர், மிக நெருக்கமாக அமர்ந்து சில்மிஷத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் முகம் சுளிக்கும் நிலை ஏற்படுவதாக புகார் தெரிவித்துள்ளனர். உடனே, இதனை தடுத்து நிறுத்தவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே, வண்டலூர் உயிரியல் பூங்கா, அண்ணா நகர் பூங்காவிலும் காதல் ஜோடிகள் மறைவிடத்தில் அமர்ந்து பூங்காவை படுக்கை அறையாக மாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.