தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள ஜெயலலிதா தோழியான சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள ஜெயலலிதா தோழியான சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. 10,500 சதுர அடி பரப்புடைய மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில், கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என செப்டம்பர் 17-ம் தேதி அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் இடிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று, சசிகலா வீட்டின் முகப்புப் பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டினர். அதில், இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் கட்டிடத்தின் உள்புறம் செல்லுதல் அல்லது பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்படுகிறது என கூறப்பட்டிருந்தது. பின்னர் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் மாநகராட்சி அதிகாரிகள் எந்த அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே உடனே வீட்டை காலி செய்யுங்கள் என கூறியுள்ளனர். சசிகலா வீட்டை இடிக்க அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டிய சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.