தஞ்சையை தாக்கிய பேரதிர்ச்சி... பள்ளி மாணவிகளை மட்டுமல்ல பெற்றோர்களையும் விட்டு வைக்காத கொரோனா...!

By Kanimozhi PannerselvamFirst Published Mar 16, 2021, 10:31 AM IST
Highlights

பள்ளிக்கும் இரு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் மாணவிகளின் பெற்றோர், உறவினர் உள்ளிட்ட 1,729 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை 1,100 மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் மாணவி ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவருக்கும், சக மாணவிகளுக்கும் பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 11-ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 20 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து, இருதினங்களுக்கு முன்பு 61 மாணவிகளுக்கும், ஆசிரியை ஒருவருக்கும்  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பள்ளிக்கும் இரு வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆசிரியர்கள், ஊழியர்களுக்கும் மாணவிகளின் பெற்றோர், உறவினர் உள்ளிட்ட 1,729 பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில்  5 மாணவிகளின் பெற்றொருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தஞ்சையில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 5 பேரும் தற்போது தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!