கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தஞ்சை பெரிய கோவிலை மார்ச் 31-ம் தேதி வரை மூட தொல்லியல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை மொத்தம் 7200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், இந்தியாவில் கொரோனா வைரஸால் 147 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக திரையரங்குகள், வணிக வளாகங்கள், பார்கள், கிளப்புகள் உள்ளிட்ட அனைத்தையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார். மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன், கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பீதி அதிகரித்து வருவதால் தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட தொல்லியல் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த கோவில்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வழக்கம் போல கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். கொரோனா காரணமாக பக்தர்களுக்கு மட்டும் அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.